Siragadikka Aasai மீனாவுக்கு தெரியப்போகும் உண்மை... சிறகடிக்க ஆசையில் இன்று!

Siragadikka Aasai மீனாவுக்கு தெரியப்போகும் உண்மை... சிறகடிக்க ஆசையில் இன்று!
X
"சிறகடிக்க ஆசை" சீரியலின் இன்றைய எபிசோட், பெண்களின் சுதந்திரம் மற்றும் திருமண வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டுள்ளது.

சிறகடிக்க ஆசை: 26 பிப்ரவரி 2024 - எபிசோட் அப்டேட்

பெண்களின் சுதந்திரம்: சண்டையா, சமரசமா?

"சிறகடிக்க ஆசை" சீரியலின் இன்றைய எபிசோட், பெண்களின் சுதந்திரம் மற்றும் திருமண வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டுள்ளது.

கிச்சன் அரட்டை

மீனா, ரோகினி மற்றும் ஸ்ருதி சமையலறையில் பேசிக்கொண்டிருக்கும்போது, திருமணத்திற்கு முன்பும் பின்பும் ஆண்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தைப் பற்றி விவாதிக்கின்றனர்.

ரோகினி : “கல்யாணத்துக்கு முன்னாடி நம்மல இம்ப்ரஸ் பன்றதுக்கு அப்டியே லவ்வா உருகுறாங்க. கல்யாணத்துக்கு அப்றம் டேக் இட் ஈசியா எடுத்துக்குறாங்க”

”மேரேஜுக்கு முன்னாடி பார்க்கணுமே நாம என்ன பண்ணாலும் ஏத்துக்குவாங்க. அவங்களே வந்து சாரி சொல்லுவாங்க”

ஸ்ருதி : முன்னாடி என் இஷ்டத்துக்கு இருப்பேன் என் மம்மி என்னை எதுவும் கேட்க மாட்டங்க.

”அவங்க 3 பேரும் சண்டை போட்டுகிட்டு போனது நமக்கு நல்லதா போச்சு. நம்ம நல்லா பேச முடியுது. அட்லீஸ்ட் நமக்குள்ள பாண்டிங்காவது வரும்”

”இப்ப மேல போய் அவங்க ரெண்டு பேரும் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க இல்ல”

ரோகினி, திருமணத்திற்கு முன் ஆண்கள் பெண்களை கவர எவ்வளவோ முயற்சி செய்தாலும், திருமணத்திற்குப் பின் அலட்சியமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டுகிறார். ஸ்ருதி, திருமணத்திற்கு முன் தன்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததை நினைவுகூர்ந்து பேசுகிறார்.

மனோஜ் - ரோகினி: வேலை விவாதம்

மீனாவை காபி கொண்டுவர சொல்கிறார் விஜயா. அதற்கு அண்ணாமலை “என்னவோ அவள வேலைக்கு வச்சி இருக்க மாதிரி சொல்ற”

விஜயா : ”அவங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க இல்ல .

அண்ணாமலை : ”அப்போ நீ வேலை செய். நீயுமா பேக் மாட்டிக்கிட்டு வேலைக்கு போற என கேட்கிறார் அண்ணாமலை.

அதே நேரத்தில், மாடியில் முத்துவும் ரவியும் சிரித்து பேசும் சத்தம் கேட்கிறது. விஜயா மீனாவை காபி கொண்டு வர சொல்லும்போது, அண்ணாமலை, மீனாவை வேலைக்காரியாக நடத்துவதாக குற்றம் சாட்டுகிறார். விஜயா, மனோஜ் பாயுடன் மாடியில் இருந்து வருவதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

விஜயா, ரோகினி ரூமுக்கு சென்று ரோகினியிடம்,

விஜயா : ”உங்களுக்குள்ள வேற ஏதும் பிரச்சனை இல்லையே”

ரோகினி : ”இப்ப வரை எதுவும் இல்லை ஆண்டி” என ரோகினி சொல்கிறார்.

மனோஜ், ரோகினியிடம் தான் ஹோட்டலில் வெயிட்டராக வேலை பார்த்ததை வெளிப்படுத்துகிறார். இனிமேல் தனக்கு பிடித்த வேலை கிடைத்தால் மட்டுமே செய்வேன் என்று உறுதியாக கூறுகிறார். ரோகினி, தன்னை யாரும் குழப்பக்கூடாது, தனக்கு ஏற்ற வேலையை தானே தேடிக்கொள்வேன் என்று தைரியமாக சொல்கிறார்.

முத்து - மீனா: மீண்டும் சண்டை

அண்ணாமலை, முத்துவின் கார் வெளியில் இல்லாததை பற்றி கேள்வி எழுப்புகிறார். முத்து, ஷெட்டில் இருப்பதாக பொய் சொல்கிறார். சத்யா விஜயாவிடம் இருந்து வழிப்பறி செய்த வீடியோவை பார்த்து முத்து கோபத்தில் கிளம்புகிறார். மீனா போனை எடுக்கும்போது, முத்து அதை கோவமாக பிடுங்குகிறார்.

ஸ்ருதியின் ஜாலி

ஸ்ருதி, முத்து இல்லாததை பற்றி கவலைப்படாமல் ஜாலியாக ரூமில் நடனம் ஆடுகிறார். முத்து வீட்டிற்கு வந்ததும், "நான் இல்லாததை பற்றி கொஞ்சம் கூட ஃபீல் பண்ணலையா?" என்று கேட்கிறார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இன்றைய எபிசோட் முடிவு

இந்த எபிசோட், பெண்கள் திருமணத்திற்கு பின் எதிர்கொள்ளும் சவால்களையும், சுதந்திரமாக வாழ விரும்பும் அவர்களின் போராட்டத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!