டிவி சீரியல் தமிழ் நடிகைகள் | serial actress name tamil

டிவி சீரியல் தமிழ் நடிகைகள் | serial actress name tamil
X
தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் முக்கிய பெண் நட்சத்திரங்களில் சிலரை பற்றி சுருக்கமாக காண்போம்

ரக்ஷா ஹோலா (நாம் இருவர் நமக்கு இருவர்)

கர்நாடக மாநிலத்தில் பிரபல மாடலிங் ஆகா பிரபலமான இவர், கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலாமானார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தமிழ் கடவுள் முருகன்" தொடரில் நடித்து அறிமுகமாகி தற்போது "நாம் இருவர் நமக்கு இருவர்" நடித்து வருகிறார்.

நித்யா ராம் (நந்தினி)

சன் தொலைக்காட்சியில் இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் உருவான நந்தினி தொடரில் முன்னணி நடிகையாக நடித்து தமிழ் திரையுலகில் புகழ் பெற்றவர்.

பிரியங்கா நல்கரி (ரோஜா)

ரோஜா தொடரில் முக்கிய முன்னணி நடிகையாக நடித்து புகழ் பெற்றவர். இவர் ஏற்று நடித்துள்ள இந்த கதாபாத்திரத்திற்காக பல விருதுகளை வென்றுள்ளார்.

ஷபானா (செம்பருத்தி)

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் நாயகியாக நடித்து பிரபலமானவர், இக்கதாபாத்திரத்திற்காக இவர் தமிழில் பல விருதுகளை வென்றுள்ளார்.

ஆலய மனசா (ராஜா ராணி)

தமிழ் சின்னத்திரையுலகில் பிரபலமானவர். இவர் பல விளம்பரங்களில் நடித்து வருகிறார். விஜ்ய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடரில் நடித்து வருகிறார்.

ஆயிஷா (சத்யா)

ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தினை ஏற்று நடித்து தமிழ் சின்னத்திரையில் அனைவரின் கவனத்தை தன்வச படுத்தியுள்ளார்.


சுஜிதா (பாண்டியன் ஸ்டோர்ஸ்)

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற தொடர் தான் சுஜிதாவுக்கு முதல் சீரியல். பல ஆண்டுகளாக தொலைக்காட்சி தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தெலுங்கு தொடர்களிலும் நடித்து வரும் இவர், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்ற பாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்றுள்ளார்.

காவ்யா (பாண்டியன் ஸ்டோர்ஸ்)

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்த சித்ரா மரணத்துக்கு பிறகு, அவரது இடத்தில் நடித்து வருபவர், காவ்யா. இவர், பாரதி கண்ணம்மா தொடரில் நடித்துள்ளார்.

Tags

Next Story