பொன்னியின் செல்வன் படத்தில் இயக்குநர் மணிரத்னம் சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Mani Ratnam Salary
X

Mani Ratnam Salary

Mani Ratnam Salary-மணிரத்னம் இந்த படத்தின் கேப்டனாக நின்று அனைத்தையும் கவனித்து இப்பேர்பட்ட படத்தை எடுத்து முடித்திருக்கிறார். அவருக்கு சம்பளமாக எவ்வளவு தரப்பட்டது என்பதை விட அவர் எவ்வளவு ஷேரை வைத்திருக்கிறார் என்பதே சரியாக இருக்கும்.

Mani Ratnam Salary

மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப்படும் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

500 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் சம்பாதித்துள்ளது. இன்னும் இரண்டாம் பாகம் வெளியாகாத நிலையில், அடுத்து வெளிவரும் படத்தின் மொத்த வசூலும் லாப கணக்கில் தான் சேரும் என்கிறார்கள். பொன்னியின் செல்வனின் கனவு படமான இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், பிரகாஷ் ராஜ் என பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

விக்ரம் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கிறார். நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். ஆதித்த கரிகாலனின் தங்கை குந்தவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் திரிஷா. இவருக்கு ஜோடியாக வரும் கதாபாத்திரம் வந்தியத் தேவனாக கார்த்தி நடித்திருக்கிறார். குந்தவையின் தம்பி அருண்மொழி வர்மனாக ஜெயம்ரவி நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வானதியா பிரபல நடன கலைஞர் ஒருவரைத் தேடி பிடித்து வந்துள்ளார் மணிரத்னம்

இந்த படத்தில் இவர்கள் தவிர இன்னும் பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். அனைவருக்கும் அவர்கள் தற்போது வாங்கும் சம்பளம் தரப்படவில்லை எனவும், இரண்டு படங்களுக்கும் சேர்த்து ஒரு படத்தில் வாங்கும் சம்பளமே தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான காரணம் இதில் வரும் கதாபாத்திரங்கள் அதிகம், மேலும் அவர்கள் இடம்பெறும் காட்சிகள் குறைவு என்பதால் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உட்பட அனைவருக்கும் குறைவான சம்பளமே தரப்பட்டிருக்கிறதாம்.

மணிரத்னம் இந்த படத்தின் கேப்டனாக நின்று அனைத்தையும் கவனித்து இப்பேர்பட்ட படத்தை எடுத்து முடித்திருக்கிறார். அவருக்கு சம்பளமாக எவ்வளவு தரப்பட்டது என்பதை விட அவர் எவ்வளவு ஷேரை வைத்திருக்கிறார் என்பதே சரியாக இருக்கும். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் மணிரத்னம் அவர்களுக்கு எத்தனை சதவிகத பங்கு என்பது தெரியாத நிலையில், அவருக்கு வரும் லாபம் அடுத்த பாகம் வரும்போதுதான் தெரியவரும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story