இனிமேல்... பாடல்! உலகநாயகனின் கேமியோ!
லியோ படத்தைத் தொடர்ந்து இனிமேல் பாடலிலும் வாய்ஸ் குடுத்து கேமியோ செய்துள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ், ஷ்ருதி ஹாசன் இருவரும் இணைந்து நடித்துள்ள புதிய ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல், வாக்கு சேகரிப்பு பரப்புரை என தமிழ்நாடே களைகட்டியுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஒரு வீடியோவில் தனது வாய்ஸில் கேமியோ கொடுத்துள்ளார். அது ராஜ்கமல் இண்டர் நேஷனல் பட நிறுவனத்தின் சார்பில், நடிகையும் இசையமைப்பாளருமான ஷ்ருதிஹாசன் பாடி இயக்கிய பாடல் ஆல்பம் இதில் ஷ்ருதியுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவர் கேட்டு முடியாது என்று சொல்வாரா என்ன? லியோ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்தை இயக்கும் நிலையில், அந்த படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலைகளை செய்து வருகிறார் லோகேஷ். இந்நிலையில் இடையில் ராஜ்கமல் பட நிறுவனம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாக, அதில் ஆல்பம் பாடல் ஒன்று வெளியாக இருப்பது தெரியவந்தது.
நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுத, இந்த ஆல்பத்தை பாடி, இயக்கியுள்ளார் ஷ்ருதி ஹாசன். இந்த பாடலில் அவரது காதல் கணவராக நடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்தியாவின் மிகவும் பிஸியான இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ்கனகராஜ். இவரது இயக்கத்தில் அடுத்தடுத்து பெரிய லைன் அப் காத்திருக்கிறது. விக்ரம் 2, கைதி 2, ரோலெக்ஸ், லியோ 2, இரும்புக் கை மாயாவி என அடுத்தடுத்து பல படங்கள் பேசப்பட்டாலும், அடுத்ததாக உறுதியான படம் தலைவர் 171. ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இந்த படத்திலும் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறதாம். படத்துக்கான கதை விவாதம் முடிந்து முழு ஸ்க்ரிப்ட் வேலைகளையும் நிறைவு செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
முன்னதாக இந்த பாடல் வீடியோ மார்ச் 25ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, இன்று மாலை 4 மணிக்கு சரியான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலின் வியூஸ் படபடவென அதிகரித்து வருகிறது.
இந்த பாடலை வெளியிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஷ்ருதிஹாசன் இருவரும். அப்போது லோகேஷிடம் பத்திரிகையாளர் ஒருவர் விஜய் குறித்து கேட்டார். அதாவது இந்த பாடலை விஜய் பார்த்துவிட்டு என்ன சொன்னார் என்பதுதான் கேள்வி. ஆனால் பாடலே இப்போதுதான் வெளியாகியுள்ளது. விஜய் அண்ணா கேரளாவில் ஷூட்டிங்கில் இருக்கிறார். இன்று இரவு விஜய் அண்ணாவிடம் பேசிவிடுகிறேன் என்று கூறினார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், திடீரென நடிகரானதற்கு காரணம் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கும் அவர் பதிலளித்திருந்தார். கமல்ஹாசன் சாருக்கும் ராஜ்கமல் பட நிறுவனத்துக்கும் நான் நோ சொல்லக்கூடாது என இருக்கிறேன். அப்படி சொல்லிவிட முடியாது. காரணம் எங்களுக்கு இருக்கும் பாண்டிங் அப்படி லியோ படத்துக்காக, ஒரு வாய்ஸ் ஓவர் கேட்டபோது பதில் ஏதும் கேட்காமல் வந்து 5 மொழிகளிலும் டப்பிங் செய்து கொடுத்துவிட்டு சென்றார் கமல்ஹாசன் என லோகேஷ் தெரிவித்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu