சூர்யா, ஜோதிகா மாதிரி நாயகனும் நாயகியும் இரட்டை வேடங்களில் நடித்த சூப்பரான படங்கள்!

சூர்யா, ஜோதிகா மாதிரி நாயகனும் நாயகியும் இரட்டை வேடங்களில் நடித்த சூப்பரான படங்கள்!
X
நாயகனும் நாயகியும் இரட்டை வேடங்களில் நடித்த சூப்பரான ஐந்து படங்களை இங்கு காண்போம்!

தமிழ் சினிமாவில் இரட்டை வேடங்களில் நடிப்பது என்பது எம்ஜிஆர், சிவாஜி துவங்கி ரஜினி, கமல், விஜய், அஜித் என்று இப்போது இருக்கும் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரை அனைவரும் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நடிகைகளும் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மீனா, ஊர்வசி, திரிஷா, நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா, பிரியாமணி, அசின், ஜோதிகா, சினேகா, சிம்ரன், ஐஸ்வர்யா ராய் என பலரும் இரட்டை வேடங்களில் தோன்றியிருக்கிறார்கள்.

ஆனால் ஒரே படத்தில் ஹீரோவும் இரட்டை கதாபாத்திரமாக ஹீரோயினும் இரட்டை கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்களா என்றால் ஆம். பேரழகன் படத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் நடித்திருந்தார்களே.

இதுபோல் வேறு எந்தெந்த படங்களில் கதாநாயகனும் கதாநாயகியும் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்கள் வாருங்கள் பார்க்கலாம்.

கலையரசி:

அறிவியல் சார்ந்த நகைச்சுவை படமான கலையரசி திரைப்படம் இயக்குனர் காசிலிங்கம் இயக்கத்தில் 1963ஆம் ஆண்டு வெளிவந்தது. வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருகை தரும் கருத்தை கொண்ட முதல் இந்திய திரைப்படமான இது அந்த காலத்தில் மிகவும் வித்தியாசமானதாக பார்க்கப்பட்டது. இதுவும் எம்ஜிஆர் படம்தான். இப்படத்தில் எம்ஜிஆர், பானுமதி, எம்.என் நம்பியார், பிஎஸ் வீரப்பா, ராஜஸ்ரீ மற்றும் சச்சு போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இதில் எம்ஜிஆர் மற்றும் பானுமதி இரண்டு வேடங்களிலும் நடித்திருப்பார்கள்.

அடிமைப்பெண்:

எம்ஜிஆர், ஜெயலலிதா, பண்டரி பாய், அசோகன், சோ மற்றும் சந்திரபாபு ஆகியோர் நடிப்பில் 1969 ஆம் ஆண்டு கே.சங்கர் இயக்கிய அடிமைப்பெண் திரைப்படம் வெளிவந்தது. இதில் எம்ஜிஆர் மன்னர் வேங்கையன் மற்றும் இளவரசர் வேங்கையன் என இரண்டு வேடங்களிலும், ஜெயலலிதா ஜீவா மற்றும் பவளவல்லியாக இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்தார்கள். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

மந்திரப்புன்னகை:

சத்யராஜ், நதியா, ரகுவரன், தேங்காய் சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகியோர் நடித்து, வி.தமிழழகன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளியான மந்திரப் புன்னகை திரைப்படமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. இப்படத்தில் சத்யராஜ் போலீஸ் அதிகாரி மற்றும் மருத்துவர் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகியான நதியா கீதா மற்றும் ஷீலா என்று இரண்டு கதாபாத்திரத்திலும் இவர்கள் இருவரும் நடித்திருக்கிறார்கள்.

பேரழகன்:

சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா மற்றும் மனோபாலா ஆகியோர் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான படம் பேரழகன். இதில் சூர்யா, ஜோதிகா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தில் சிறந்த நடிகர், நடிகை மற்றும் நகைச்சுவை நடிகர் என்று சூர்யா, ஜோதிகா மற்றும் விவேக் அவர்களுக்கு விருதுகள் கிடைத்தது.

2 heroine 1 hero movie list

ஆர்யா, அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு ஒரு காதல் கற்பனை திரைப்படமாக இரண்டாம் உலகம் வெளிவந்தது. இப்படம் இரண்டு வெவ்வேறு கிரகங்களில் ஏற்படும் நிகழ்வுகளை ஒரே நேரத்தில் வெளிவரும் இரண்டு கதைகளை பற்றி எடுக்கப்பட்டிருக்கும். இதில் அனுஷ்கா, ஆர்யா இரண்டு வேடத்தில் நடித்திருப்பார்கள்.

Tags

Next Story