H வினோத்தின் புதிய படம்: பொலிட்டிக்கல் காமெடி

H வினோத்தின் புதிய படம்: பொலிட்டிக்கல் காமெடி
X
H வினோத்தின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் மற்றும் கார்த்தியின் படங்களால் தடுமாறிய H வினோத், விஜய் சேதுபதியுடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்தப் படம் பொலிட்டிக்கல் ஜானரில் காமெடியாக உருவாகவுள்ளது. இதனால் கமல்ஹாசன், கார்த்தி படங்களுக்கு முன்னரே விஜய் சேதுபதி படம் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக உயர்ந்துள்ளார் H வினோத். இவர் இயக்கவிருந்த கமல்ஹாசன் நடித்த KH 233 படம் ஷூட்டிங் தொடங்கும் முன்னரே ட்ராப் ஆனதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் அடுத்த படத்தை எடுக்க திட்டமிட்ட H வினோத், கார்த்தியின் தீரன் அதிகாரம் 2ம் பாகத்தை இயக்கவிருந்தார். ஆனால், கார்த்தி தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதனால் அந்தப் படம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கார்த்தி தற்போது நடித்து வரும் இரண்டு படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக கைதி 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி அதனைத் தொடர்ந்து தான் கைதி 2 படத்துக்கு வர இருக்கிறார். இப்படி ஒரு குழப்பத்தில் மேலும் தாமதிக்காமல் ஹெச் வினோத் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குவது என முடிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விரக்தியில் இருந்த H வினோத்துக்கு விஜய் சேதுபதி உதவி செய்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் H வினோத் ஒரு படம் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. தற்போது அந்தப் படத்தை உடனடியாக தொடங்கலாம் என விஜய் சேதுபதி கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இந்தப் படத்தில் யோகி பாபுவும் நடிக்கவுள்ளார்.

பொலிட்டிக்கல் ஜானரில் காமெடியாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாம். சின்ன பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தை 2024 இறுதிக்குள் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்நிலையில் விரைவில் விஜய் சேதுபதி, யோகி பாபு, H வினோத் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்தப் படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!