இதுதான் இலக்கு... உண்மையைப் போட்டுடைத்த எதிர்நீச்சல் இயக்குநர்!

இதுதான் இலக்கு... உண்மையைப் போட்டுடைத்த எதிர்நீச்சல் இயக்குநர்!
X
சுவாரஸ்யம் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் நினைக்கும்போது இந்த சீரியலின் முடிவு தெரியும் என திருச்செல்வம் தெரிவித்துள்ளார்

எதிர்நீச்சல் சீரியலின் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கப்போகிறது என்பதை போட்டு உடைத்துள்ளார் எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம்

டிஆர்பியில் மற்ற சேனல்களுக்கு மட்டுமில்லாமல், சன்டிவி தொடர்களுக்கே டஃப் கொடுத்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல். பெண்கள் போடும் எதிர்நீச்சலை மையமாகக் கொண்டே கதை நகர்த்தப்பட்டு வருகிறது.

அடிமைப்பட்டு கிடக்கும் பெண்கள் அடக்கி ஆளத் துடிக்கும் ஆண்கள் அவர்களுக்கு துணையாக நிற்கும் அம்மா, பெண்களுக்கு துணையாக திடீர் டிவிஸ்ட் அடித்த பாட்டி என ஒவ்வொரு நாளும் திருப்புமுனையாக சென்று கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர். முதலில் அண்ணன்களுக்கு சாதகமாக பேசி வந்த ஆதிரை இப்போது காதலில் விழ, அதற்கு எதிராக அண்ணன்களே நிற்க, நிலைமை புரிந்து படிப்படியாக யோசிக்கும் நிலைக்கு வந்திருக்கிறாள் ஆதிரை.

எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி ஆகியோர் நன்கு படித்தவர்கள்தான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏமாந்து இந்த வீட்டுக்கு திருமணமாகி வந்திருக்கிறார்கள். முதலில் வந்தவள் ஈஸ்வரி, அவருக்கு பின் வந்தவர்கள் ரேணுகா, நந்தினி இப்படி மூன்று பேரும் அடிமைகளாக இங்கு வந்து மாட்டிக்கொள்ள இதிலிருந்து தப்பித்து ஓட நினைத்தது ஜனனிதான்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதைப் போல தெறித்து ஓட நினைத்தவளுக்கு, போராடி எதிர்நீச்சல் போட கற்றுத் தந்தவள் பாட்டிதான். அவள் சொன்னது ஒன்றுதான் இன்னும் எங்கெல்லாம் ஓட முடியும் உன்னால். உன்னையே நம்பி விடிவுகாலம் தெரியாமல் இருக்கும் மற்ற மூன்று மருமகள்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்று கேட்டதும் அவர்களுக்கும் சரி, சக்திக்கும் சரி ஒரு வாய்ப்பு வழங்க வேண்டி மீண்டும் வீட்டுக்கு வந்தவள் ஜனனி.

இந்த வீட்டு பெண்களுக்கு சிறிய துரும்பு அளவில் எது கிடைத்தாலும் அதை கயிறாகக் கொண்டு மேலே ஏறி வந்துவிடுவார்கள். அதைத்தான் காட்ட விரும்புகிறேன். இதன்மூலம் மற்ற பெண்களுக்கும் நம்பிக்கையை விதைக்க முடியும் என நினைக்கிறேன் என்றார் திருச்செல்வம்.

சுவாரஸ்யம் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் நினைக்கும்போது இந்த சீரியலின் முடிவு தெரியும். அதுவரை இந்த பெண்கள் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!