Tamannaah Bhatia At Vogue Event- பேஷன் ஷோவிற்கு காதலன் விஜய் வர்மாவின் சட்டையை அணிந்து வந்த நடிகை தமன்னா
பேஷன் ஷோ நிகழ்ச்சியில் காதலரின் மேலாடையை அணிந்து வந்த நடிகை தமன்னா.
Tamannaah Bhatia At Vogue Eventதமிழில் கேடி என்ற படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் அதன்பிறகு கல்லூரி, வியாபாரி, பையா என பல படங்களில் நடித்த அவர் விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
Tamannaah Bhatia At Vogue Eventபாகுபலி படத்தின் முதல் பாகத்தில் இவர் போராளி பாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ் பெற்றார். தமிழை போல தெலுங்கிலும் வெற்றிகொடியை நாட்டினார்.தமிழில் இப்போதெல்லாம் அவருக்கு வாய்ப்புகள் குறைய பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
Tamannaah Bhatia At Vogue Eventஅண்மையில் தமிழில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு நடனம் ஆடி மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளார்.படங்களில் நடிப்பதை தாண்டி நடிகை தமன்னா நிறைய வித்தியாசமான உடைகள் அணிந்து போட்டோ ஷுட் நடத்துவது, நிகழ்ச்சிகளுக்கு செல்வது என பிஸியாக இருக்கிறார்.
Tamannaah Bhatia At Vogue Eventஅண்மையில் அவர் மேலாடையில் வித்தியாசமான உடை அணிந்து தனது காதலர் விஜய் வர்மாவுடன் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த மேலாடை விஜய் வர்மாவுடையது என்பதை வெளிப்படுத்தினார். அந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் அவர் தங்க விக்ரகம் போல் காட்சி அளிக்கும் வேடத்திலும் தோன்றி உள்ளார்.
Tamannaah Bhatia At Vogue Eventவிஜய் வர்மாவுடன் எப்போது திருமணம் என்பது பற்றி தமன்னா இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என்றாலும் அவருடன் சேர்ந்து டின்னர் சாப்பிடுவதற்கான தேதியை விரைவில் வெளியிட இருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu