16 வருடத்துக்குப் பிறகு நடிகை லைலா மீண்டும் திரையுலகுக்கு வருகை

16 வருடத்துக்குப் பிறகு நடிகை லைலா மீண்டும் திரையுலகுக்கு வருகை
X
16 வருடத்துக்குப் பிறகு லைலா மீண்டும் திரையுலகுக்குத் திரும்பி கார்த்தியுடன் சர்தார் படத்தில் அவர் நடிக்கிறார்.

தமிழில், 'கள்ளழகர்', 'முதல்வன்', 'தில்', 'மவுனம் பேசியதே', 'உன்னை நினைத்து', 'பிதாமகன்', 'பரமசிவன்' உட்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர் லைலா. தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்து வந்தார். கடைசியாக 'திருப்பதி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். பிறகு மெஹ்தின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டார். மெஹ்தின் - லைலா தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் 16 வருடத்துக்குப் பிறகு லைலா மீண்டும் திரையுலகுக்குத் திரும்பியிருக்கிறார். கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தில் முக்கிய வேடத்தில் அவர் நடிக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள் படமாகி வருவதாகக் கூறப்படுகிறது.


சென்னையில் சர்தார் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடிக்கின்றனர். சங்கி பாண்டே, முரளி சர்மா, முனீஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிக்கிறார்.

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!