ஆடு ஜீவிதம் எப்படி இருக்கு? வெளிவந்த விமர்சனம்...!
29ம் தேதி வெளியாகும் ஆடு ஜீவிதம் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அதன்படி இந்த படம் நிச்சயமாக மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகும் என்ற பேச்சு எழுந்துள்ளது. மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் நல்ல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்விராஜ், அமலா பால், வினீத் ஸ்ரீநிவாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ஆடு ஜீவிதம் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மை கதையை மையமாக கொண்ட இப்படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.
பென்யாமின் என மலையாள எழுத்தாளர் எழுதி உருவான நாவல் ஆடுஜீவிதம். மலையாள கூலியாள் ஒருவர் சவுதியில் வேலைக்கு சென்று அங்கு அடிமை வாழ்க்கை வாழ்ந்ததையும் அவர் பட்ட கொடுமைகளையும் பறைசாற்றும் வகையிலான ஒரு படைப்பு. இதனை திரைப்படமாக இயக்குகிறார் பிலெஸ்ஸி.
ப்ருத்விராஜ் சுகுமாறன், அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு இசை ஏ ஆர் ரஹ்மான். இந்த படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர் ஒருவர் படம் குறித்து சிலாகித்து பேசியுள்ளார்.
விமர்சனத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
படத்தை பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில், "ஆடு ஜீவிதம் எனும் அற்புதமான படம் பார்த்தேன். விஷுவல் காட்சிகள் பிரமாதம். நடிகர் பிரித்விராஜ், உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு பாராட்டுக்கள். அற்புதமான BGM உடன் இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்துள்ள ஏ.ஆர். ரஹ்மான். இந்த உண்மை கதையை செல்லுலாய்டில் கொண்டு வந்ததற்காக இயக்குநர் பிளஸ்ஸிக்கு மிக்க நன்றி. ஒளிப்பதிவு இணையற்றவை. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்" என பதிவிட்டுள்ளார்.
படத்தின் எதிர்பார்ப்பு:
இந்த விமர்சனம் படத்திற்கு மிகப்பெரிய நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்விராஜ், அமலா பால் என பிரபலங்கள் நடித்துள்ளதாலும், உண்மை கதையை மையமாக கொண்டதாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இசை படத்துக்கு மிகப் பெரிய பாசிடிவாக அமைந்திருப்பதும் தெரியவருகிறது. இதனால் படத்துக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கி படுவேகமாக திரையரங்குகளில் நிரம்பி வருகின்றன. தமிழகத்திலும் இந்த படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
படத்தின் கதை:
இப்படம், சவுதி அரேபியாவில் ஒரு கேரள இளைஞர் ஆடுகளை மேய்ப்பவராக பணிபுரியும் உண்மை கதையை அடிப்படையாக கொண்டது. அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்களையும், போராட்டங்களையும் பற்றியது.
படத்தின் சிறப்பம்சங்கள்:
பிரித்விராஜின் நடிப்பு இந்த படத்தில் நிச்சயமாக பேசப்படும்.
அமலா பாலின் நடிப்பு நன்றாக இருக்கிறது. சினிமாவில் முன்னணி நடிகையாக ஆக வேண்டியவர் இந்த படத்தின் மூலம் இன்னொரு ரவுண்ட் வர வாய்ப்புள்ளது.
ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஏற்கனவே மரியான் படத்தில் இதுபோன்ற கதையம்சத்தை இவரது இசை மூலம் பிரம்மிக்கச் செய்திருப்பார்.
பிரமாதமான விஷுவல் காட்சிகள், பாலைவன காட்சிகள் உண்மையை கண்முன் நிறுத்துகின்றன.
உண்மை கதையின் தாக்கம்
முடிவுரை:
ஆடு ஜீவிதம் படம், ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களையும் கொண்டிருப்பதாக தெரிகிறது. 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படம், வசூல் சாதனை படைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu