ஜெர்மன் வாழ் இந்தியர்களை கவர்ந்த பிரதமர் மோடி பேச்சு..!

இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு தயாராகி வருவதாக ஜெர்மன் தலைநகரில், பாரதப்பிரதமர் மோடி பெருமிதம் பொங்க குறிப்பிட்டார்.

Update: 2022-06-26 15:16 GMT

பாரதப்பிரதமர் நரேந்திர மோடி.

பாரதப்பிரதமர் மோடி, ஜெர்மன் நாட்டின் தலைநகர் முனீச் நகரில் இந்தியர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்போது 4-வது தொழிற்புரட்சியில் இந்தியா உலகையே வழிநடத்தி வருகிறது. 90 சதவீதத்தினர் கொரோனா இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 99 சதவீத கிராமங்களில் சமையல் எரிவாயுவை பயன்படுத்துகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர் என குறிப்பிட்டார்.

மேலும் நாட்டை தூய்மையாக வைத்திருப்பது தங்கள் கடமை என மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். இந்தியா இப்போது முன்னேற்றம் வளர்ச்சி மற்றும் அதன் கனவுகளை நிறைவேற்ற தயாராகி வருகிறது என, பெருமிதத்துடன் பிரதமர் மோடி தெரிவித்தார். ஜி 7 உச்சி மாநாட்டுக்காக ஜெர்மனுக்கு சென்றுள்ள பிரதமர் மோடியின் பேச்சு, அந்நாட்டில் வாழும் இந்தியர்களை பெரிதும் ஈர்த்து, உற்சாகப்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News