இலங்கை நெருக்கடி: கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்தால் அடுத்தது என்ன?

இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி ராஜபக்ச ராஜினாமா செய்தால் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய விபரங்கள்

Update: 2022-07-10 06:09 GMT

சனிக்கிழமையன்று கொழும்புவில் கோத்தபய இல்லத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் காவல்துறை தடுப்புகளை உடைத்து வளாகத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களுக்குள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச, தப்பிச் சென்றார். முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலகியுள்ள நிலையில், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தொடர்ந்து பதவியில் இருப்பாரா இல்லையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஜனாதிபதி ராஜினாமா செய்தால் என்ன நடக்கும்?

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது பதவிக் காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்தால், நாடாளுமன்றம் தனது உறுப்பினர்களில் ஒருவரை அதிபராக தேர்ந்தெடுக்க வேண்டும். ஜனாதிபதி பதவி விலகிய ஒரு மாத காலத்திற்குள் புதிய நியமனம் செய்யப்பட வேண்டும்.

ஜனாதிபதி ராஜினாமா செய்தால், அவர் ராஜினாமா செய்த மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும். கூட்டத்தில், ஜனாதிபதியின் ராஜினாமா குறித்து நாடாளுமன்றத்தின் பொதுச்செயலாளர் நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். காலியாக உள்ள பதவிக்கான வேட்புமனுக்களை பெறுவதற்கு ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டால், அந்தத் தனிநபர் அலுவலகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்தால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அறுதிப் பெரும்பான்மை வாக்கு பெற்றவர் தேர்ந்தெடுக்கப்படுவார் .

புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை என்ன நடக்கும்?

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தற்போதைய பிரதமர் தற்காலிக ஜனாதிபதியாக வருவார். எனவே, இந்த நிலையில், கோத்தபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தால், ரணில் விக்கிரமசிங்க, புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் வரை ஒரு மாத காலத்திற்கும் குறைவான காலத்திற்கு ஜனாதிபதியாக பதவியேற்பார்.

அமைச்சரவையின் அமைச்சர்களில் ஒருவர் பிரதமரின் அலுவலகத்தில் செயல்பட நியமிக்கப்படுவார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மீதமுள்ள காலத்திற்கு பதவியில் இருக்க முடியும்.

Tags:    

Similar News