ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு துக்கம்

இந்த துக்கக் காலத்தில், அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு விழாக்கள் நடைபெறாது;

Update: 2024-05-20 13:19 GMT

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் ரைசி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் செயத் இப்ராகிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய அரசு செவ்வாய்கிழமை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிகிறது. 

இந்த துக்கக் காலத்தின் போது, ​​வழக்கமாகக் காட்டப்படும் அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். நாள் முழுவதும் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது

63 வயதான ரைசியும் அவருடன் பயனித்தவகளும் ஞாயிற்றுக்கிழமை அஜர்பைஜான்-ஈரான் எல்லையில் உள்ள ஒரு இடத்திற்கு விஜயம் செய்துவிட்டு வடமேற்கு நகரமான தப்ரிஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர்களின் ஹெலிகாப்டர் வடமேற்கு ஈரானில் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் ஹெலிகாப்டரில் இருந்த ரைசி, அப்துல்லாஹியன் மற்றும் பல அதிகாரிகள் இறந்து கிடந்தனர்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் செய்ட் இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமித்-அப்துல்லாஹியன் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மறைந்த பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், மே 21ஆம் தேதி (செவ்வாய்கிழமை) இந்தியா முழுவதும் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு முடிவு செய்துள்ளது என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ரைசியின் மறைவு மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அளிப்பதாகக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த துயரமான நேரத்தில் ஈரானுடன் இந்தியா துணை நிற்கிறது என்றார்.

வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும் ரைசி மற்றும் அவரது ஈரானிய வெளியுறவு மந்திரியின் மரணம் குறித்து அதிர்ச்சி தெரிவித்தார்.

"ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் டாக்டர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் எச். அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் காலமானதைக் கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்" என்று ஜெய்சங்கர் X இல் கூறினார்.

Tags:    

Similar News