அதானி சம்பளம் ரூ 167 கோடி: மாசத்துக்கில்லை ஜென்டில்மேன், நிமிடத்திற்கு

உலகில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பை வைத்து அவர்களின் சம்பளத்தை நிமிடத்திற்கு கணக்கிட்டால், எல்லாமே கோடியில் தான்

Update: 2022-08-12 11:27 GMT

கௌதம் அதானி

நமக்கெல்லாம் சம்பளம் என்றால் மாதத்திற்கு என்று தான் கணக்கில் வரும், உலகில் உள்ள பணக்காரர்கள் ஒவ்வொருவரும் ஆண்டிற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என கணக்கிட்டு அந்த பணத்தை ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என பார்த்தால் தலை சுற்றி விடும்.

இவர்களின் நிமிட சம்பளம் கோடிகளில் தான். வாங்க, ஒவ்வொருத்தரும் நிமிடத்துக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என பார்க்கலாம்

எலான் மஸ்க் 

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 200 மில்லியன் அமரிக்க டாலருக்கும் அதிகம். இவர் 2021ம் ஆண்டில் ஒரு நிமிடத்திற்கு 22,500 அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ரூ16.76 லட்சம் சம்பாதித்துள்ளார். 2022ம் ஆண்டு இவர் ஒரு மணி நேரத்திற்கு 140 கோடி அமெரிக்க டாலர் சம்பாதிப்பார் என சொல்லப்படுகிறது.

பெர்னார்டு அர்னால்டு

பல பன்னாட்டு நிறுவனங்களை நடத்தி வரும் பிரான்ஸ் நாட்டு முதலீட்டாளரான பெர்னார்டு அர்னால்டு ஒரு நிமிடத்திற்கு $17,716 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ13.19 லட்சம் சம்பாதிகிறார்.

முகேஷ் அம்பானி 

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, கடந்த 10 ஆண்டுகளில் இருமடங்காக மாறியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஒரு நிமிடத்திற்கு ரூ1.5 கோடி பணம் சம்பாதித்துள்ளார்.

கெளதம் அதானி

அதானி, இந்தியாவின் 2 வது பணக்காரராக மாறியுள்ளார். இவர் கடந்த 2021ம் ஆண்டு மட்டும் ஒரு நாளுக்கு ரூ1002 கோடி சம்பாதித்துள்ளார். அதாவது ஒரு நிமிடத்திற்கு ரூ167 கோடி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ1.40 லட்சம் கோடியாக இருந்த இவரின் சொத்து மதிப்பு தற்போது ரூ5.05 லட்சமாக மாறியுள்ளது.

ஜெப் பெசோஸ் 

அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் எகடந்த 2021ம் ஆண்டு ஒரு நிமிடத்திற்கு 1.42 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது ரூ1.06 கோடி சம்பாதித்துள்ளார்.

வாரன் பஃபட் 

அமெரிக்க தொழிலதிபரான வாரன் பஃபட்டின் சொத்து மதிப்பு கடந்த 2013ம் ஆண்டு 1270 கோடி அமரிக்க டாலர். 2021ம் ஆண்டு ஒரு நாளுக்கு சராசரியாக இந்திய மதிப்பில் ரூ275 கோடி சம்பாதித்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு ரூ11 கோடி தான் ஜென்டில்மேன்

லாரி பேஜ் 

கடந்த 2013 ரிப்போர்ட்டின் படி கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ் ஒரு நிமிடத்திற்கு 18,719 அமெரிக்க டாலர் அதாவது ரூ13.93 லட்சம் சம்பாதித்துள்ளார்.

பில்கேட்ஸ் 

கடந்த 2018-19 ஆண்டில் இவரது ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 106 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. அதன் படி கணக்கிட்டால் இவர் ஒரு நிமிடத்திற்கு இந்திய மதிப்பில் ரூ22.62 லட்சம் சம்பாதித்துள்ளார்.

ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள், பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருப்பார்கள் என்பது எவ்வளவு உண்மை?

Tags:    

Similar News