செவ்வாய்க்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பு: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

உயிரினங்கள் உருவாக காரணமாக இருக்கும் ஆர்கானிக் கார்பன், செவ்வாய்கிரக பாறையில் இருப்பதை ஆய்வில் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Update: 2022-07-01 12:41 GMT

2012 ஆம் ஆண்டில் நாசா செவ்வாய்க்கிரகத்திற்கு அனுப்பப்பட்டு, ஆய்வு மேற்கொண்டு வரும் கியூரியாசிட்டி ரோவர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நாசா செவ்வாய்க்கிரகத்திற்கு கியூரியாசிட்டி ரோவர் அனுப்பப்பட்டது. இந்த ரோவர் 10 ஆண்டுகளாக தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் பயணித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் உயிரினங்கள் இருந்தனவா? என்பதை கண்டறியும் பணியை முக்கியமாக ரோவர் செய்து வருகிறது. இந்த கிரகத்தில் ஒரு காலத்தில் ஏரியாக இருந்த பகுதியில் 350 கோடி ஆண்டுகள் பழமையான பாறை கண்டுபிடிக்கப்பட்டது. அதனை துளையிட்டு, அதில் இருந்த துகள்களை கியூரியாசிட்டி ரோவர் சேகரித்தது.

இதைத்தொடர்ந்து, கியூரியாசிட்டியின் உள்ளே அமைக்கப்பட்ட சிறிய ஆய்வகத்தில் பாறை துகள்கள் அதிக வெப்பத்தில் சூடாக்கப்பட்டு, அதன் அணுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் உள்ள ஆர்கானிக் கார்பனின் அளவு துல்லியமாக அளவிடப்பட்டது. உயிரினங்கள் உருவாக ஆர்கானிக் கார்பன் அடிப்படை தேவை என்பதால், ஒருவேளை உயிரினங்கள் செவ்வாய்கிரகத்தில் இருந்திருக்கலாம் என்னும் ஐயப்பாடு நாசா விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News