பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ் பங்கேற்பாரா?முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி பதில்

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்து கொள்வாரா? என்னும் கேள்விக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தடாலடியாக பதில் அளித்தார்.

Update: 2022-06-22 07:28 GMT
அ.தி.மு.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார்.

சென்னையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக., அனைத்து பிரிவுவினரும், அமைப்பு ரீதியான நிர்வாகிகள் அனைவரும் ஒற்றை தலைமை தான் அதிமுக.,விற்கு காலத்தின் தேவை என தீர்மானித்துள்ளனர். இடைப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகம் மலர்ந்த மாபெரும் இயக்கம் அ.தி.மு.க. அராஜக போக்குக்கு இந்த இயக்கத்தில் இடமில்லை. பன்னீர்செல்வம் தவறான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். இந்த தகவலை வேதனையுடன் தான் நான் இங்கு வெளிப்படுத்துகிறேன் என குறிப்பிட்டார்.

மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுக்குழுவில் கலந்து கொண்டு, அங்கு எடுக்கும் முடிவுக்கு பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் கட்டுப்பட வேண்டும். அது தான் தொண்டர்களின் எண்ணம். பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்து கொள்வாரா? என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என தடாலடியாக குறிப்பிட்டார்.

பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பி.எஸ் கலந்து கொள்ள வேண்டும் என்பது தான் அனைவருடைய விருப்பம். கலந்து கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒற்றை தலைமை நோக்கி கட்சி செல்கிறது. தொண்டர்களின் எண்ணத்திற்கு யாராக இருந்தாலும் மதிப்பு தர வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறினார்.

Tags:    

Similar News