அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!

அ.புதுப்பட்டி கிராமத்தில் பிடிஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கோடைகால இலவச கபாடி பயிற்சி நடந்தது.

Update: 2024-05-19 15:52 GMT

கோடைகால கபாடி பயிற்சி 

அலங்காநல்லூர் :

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, அ.புதுப்பட்டி கிராமத்தில் பெரிய ஆற்றங்கரை அருகில் பிடிஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கோடைகால இலவச கபாடி பயிற்சி முகாம் கடந்த 20 நாட்களாக நடைபெற்றன.

இதில், அலங்காநல்லூர் மற்றும் வாடிப்பட்டி வட்டார மாணவர்களும் கலந்து கொண்டனர். மாநிலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டன. கலந்து கொண்ட மாணவர்களுக்கு அனைவருக்கும் பயிற்சி முடிவில் ஜெர்சி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை , அகில இந்திய பல்கலைக்கழக விளையாட்டு வீரர் மதுரை மாவட்ட அமேச்சூர் கபடி கழக துணைச் செயலாளர் வினோத்குமார், மற்றும் கார்த்திகேயன் , பயிற்சி முடிவில் மதுரை மாவட்ட அமைச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் அகஸ்டின் , துணைச் செயலாளர் தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர் கலந்து கொண்டு பயிற்சிபெற்ற அனைவருக்கும் துணை செயலாளர் தங்கபாண்டியன் நன்றி கூறினார்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடைகால விடுமுறை என்பதால் மாணவர்கள் இந்த கோடைகால கபாடி பயிற்சியில் கலந்துகொண்டனர். இலவச பயிற்சி என்பதுடன் நுணுக்கமான பயிற்சி என்பதால் ஆர்வமுடன் திரளாக மாணவர்கள் மற்றும்  இளைஞர்கள் கலந்துகொண்டனர். 

தற்போது அரசு வேலைவாய்ப்பில் கபாடி விளையாடுவோருக்கும் முன்னுரிமை இருப்பதால், திறமையாக விளையாடி மாவட்ட மற்றும் மாநில அளவில் அணிகளில் இடம்பெற்றால் அரசு விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News