மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட பசுமைக்குழு ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் மாவட்ட பசுமைக்குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

Update: 2021-08-24 15:30 GMT

விருதுநகரில் மாவட்ட கலெக்டர் ஜெ.மேகநாதரெட்டி, தலைமையில் நடைபெற்ற மாவட்ட பசுமைக்குழு கூட்டம் 


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அரங்கக் கூட்டரங்கில் மாவட்ட பசுமைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி  தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள பசுமைக் காடுகள் மற்றும் காப்புக்காடுகள் ஆகியவற்றின் பரப்பினை அதிகரித்திட மரங்கள் வெட்டப்படாமல் மறு நடுதல் செய்யப்பட வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் அதன் பகுதியில் உள்ள மரங்களை கணக்கெடுத்து மர விவரங்கள் உள்ளிட்ட விவரப் பலகை வைக்கப்பட வேண்டும்.

குளங்களில் உள்ள கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். கண்மாய் கரையினை சுற்றி பனைமரங்கள் நடப்பட வேண்டும். மாவட்டத்தில் குளங்களில் உள்ள கருவேல மரங்கள் பற்றிய விவர அறிக்கையை, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். பனைமரங்களை வெட்டக்கூடாது. சாலைகளில் உள்ள பழைய மரங்களை வெட்டாமல் அப்புறப்படுத்த வேண்டும். மண்ணுக்கேற்ற மரங்களை நட வேண்டும்.   தமிழ்நாடு காப்புக் காடுகள் நிர்ணயிக்கப்பட்ட பரப்பளவைவிட  மிகவும்  குறைவாக உள்ள காரணத்தினால்,  விருதுநகர் மாவட்டத்தில் காப்புக்காடுகளை அதிகரிக்க  மாவட்ட பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்ரமணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், மாவட்ட வன அலுவலர் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News