விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணையில் நீர் வீணாவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2021-12-08 08:46 GMT

சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணையில் நீர் வீணாவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணையில் 35 ஆண்டுகளாக மழை நீர் தேக்கி வைக்க முடியாமல் நீர் வீணாவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆணைக்குட்டம் அணையின் ஷட்டர் பிரச்சனை காரணமாக கடந்த 35 ஆண்டுகளாக ஒரு முறை கூட இந்த அணையில் மழைநீரைத் தேக்கி வைக்க முடியவில்லை. இதன் காரணமாக பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த அணையில் தற்காலிக நடவடிக்கைகள் மூலமே நீர் கசிவது நிறுத்தப்படுவதாகவும் ஆண்டுதோறும் இந்த அவல நிலை தொடர்வதாக கூறி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசு ஆனைக்குட்டம் அணையில் நீர் தேக்கி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும், அதேபோல் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாறு அணைக்கு நீர் வரும் பாதைகளை சில தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து விதி மீறி கட்டிடங்கள் கட்டி இருப்பதாகவும், இந்த கட்டிடங்கள் கட்டிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வைப்பார் அன்னக்கு வரும் கால்வாய்கள் அதை சரி செய்ய வேண்டும் எனக் கூறி நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி உடனடியாக மாவட்டத்தில் உள்ள நீர்த் தேக்கங்களை சரிசெய்து நீர் தேக்கி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News