விருதுநகரில் நகராட்சி ஆணையாளர் இல்லாததால் பணிகளில் தொய்வு - மக்கள் புகார்

விருதுநகர் நகராட்சியில் ஆணையாளர் இல்லாததால், சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

Update: 2021-04-30 05:15 GMT

விருதுநகர் நகராட்சியில் கடந்த மாதம் முதல் நகராட்சி ஆணையாளர் பணியிடம் காலியாக உள்ளது. மேலாளர் ஜெகதீஸ்வரி கூடுதலாக பொறுப்பு வகித்து வருகிறார்.ஆணையாளர் இல்லாததால் ஆணையாளரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத்தின் சுகாதார நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வழக்கமாக காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளில் குப்பைகள் சேகரிக்கப்படும்.

ஆனால் தற்போது காலை நேரங்களில் மட்டுமே குப்பை பெறப்படுகிறது. சில பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் முறையாக பணிக்கே வராமல் இருப்பதால் சுகாதார பணிகளில் கடுமையான தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் தெருவோரங்களில் குப்பை கொட்டும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் சாக்கடையை சுத்தம் செய்யும் பணிகளும் முறையாக மேற்கொள்ளப் படுவதில்லை. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையான கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் பெயரளவிலே செய்யப்படுகின்றன.

சுகாதார ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்கள் தன்னிச்சையாக செயல்படுதால் முறைகேடுகளும் தொடர்கின்றன. கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் புதிய ஆணையாளர் இல்லாதது விருதுநகர் நகராட்சிக்கு சுகாதாரத்தில் பெரும் பின்னடவை ஏற்படுத்துவதால் அவசர நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக புதிய ஆணையாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News