கலசலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்களின் கிராம தங்கல் பயிற்சித் திட்டம்

கலசலிங்கம் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

Update: 2022-01-13 08:49 GMT

 நெற்பயிர் அறுவடை பரிசோதனை பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி இறுதி ஆண்டு இளநிலை வேளாண்மை துறை மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் காரியாபட்டி வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்கள் முடுக்கன்குளம் குறுவட்டத்திலுள்ள கே. நெடுங்குளம் வருவாய் கிராமத்தில்நெற்பயிர் அறுவடை பரிசோதனை (CCE) நடைபெற்றது. இந்த பயிற்சியின்போது வேளாண் உதவி இயக்குனர் செல்வராணி, வேளாண்மை அலுவலர் க. முருகேசன், உதவி வேளாண் இயக்குநர் அனிதா, பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் வைரநாதன், பயிர் காப்பீட்டு திட்ட அலுவலர் அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

நெல் வயலில் கலசலிங்கம் கல்லூரி மாணவர்கள்.

இப்பயிற்சியில் கலசலிங்கம் இறுதி ஆண்டு இளநிலை வேளாண்மை துறை மாணவர்கள் சிவநந்தா, சீனிவாசன், வீரமணிதங்கம், ஶ்ரீராம், அருண் குமார், ஜெயராம், கருப்புச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு அதன் செயல் முறையினையும் அதன் பயன்களையும் கற்று அறிந்து கொண்டனர்.

Tags:    

Similar News