தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது

வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி முறையில் பிரிக்கப்பட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தொடங்கி வைத்தார்.

Update: 2021-03-08 04:35 GMT

வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி முறையில் பிரிக்கப்பட்டு 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நேற்று தொடங்கி வைத்தார்.

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை பிரித்து அனுப்பும் பணி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கியது.

விருதுநகர் வேளாண் விற்பனைக் குடோனில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தை சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக தேர்தல் ஆணையம் கணினி முறையில் பிரிக்கப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பும் பணி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன் தேர்தல் ஆணையம் வழங்கிய பதிவு எண் முறைப்படி வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபார்த்து, தனித்தனியாக பிரித்து தொகுதிவாரியாக சட்டமன்ற தேர்தல் நடத்தும் தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைத்தார். அதன் பின்பு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கள் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்த்து அங்கிருந்து லாரிகள் மூலம் எடுத்துச் சென்றனர்.

Tags:    

Similar News