விழுப்புரம் மயிலம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை

கொல்லியங்குணம் ஊராட்சியனர் மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2021-10-13 11:24 GMT

மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை அளிக்க வந்தவர்கள்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லியங்குணம் ஊராட்சியில் போட்டியிட்ட ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்கள் மீண்டும் வாக்கு எண்ணிக்கை கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்,

அந்த மனுவில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லியங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கிி உள்ளது, அதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆனந்தி ஸ்ரீதரன் என்பவர் வெற்றி பெற்றதை மறைத்து ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டதாக கூறி விிட்டு, என்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த ஜோதிலட்சுமி வெற்றி பெற்றதாக ரகசியமாக வெற்றி சான்றிதழ் வழங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரியும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு இன்று கொடுத்தனர்.

Tags:    

Similar News