Udumalai 3 Workers Killed- உடுமலை அருகே சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு

Udumalai 3 Workers Killed- உடுமலை, கொழுமம் அருகே சிதிலமடைந்த சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Update: 2023-10-16 08:08 GMT

Udumalai 3 Workers Killed- இன்று காலை 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான, சிதிலமடைந்த சமுதாய நலக்கூடம் 

Udumalai 3 Workers Killed, Community Welfare Centre- திருப்பூர் மாவட்டம், உடுமலை கொழுமம் பழனி செல்லும் சாலையில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இப்பகுதி பஸ் நிறுத்தமாகவும் உள்ளது. இதனால் காலை முதல் இரவு வரை அப்பகுதி பொதுமக்கள் சமுதாய நலக்கூடம் முன்பு பஸ்சுக்காக காத்து நின்று உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வார்கள்.

இன்று காலை கொழுமம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களான மணிகண்டன் (வயது 28), கவுதம் (29), முரளிராஜன் (35) ஆகியோர் வேலைக்கு செல்வதற்காக பஸ்சுக்காக சமுதாய நலக்கூடம் முன்பு காத்து நின்றனர்.

இந்நிலையில் உடுமலை பகுதியில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சமுதாய நலக்கூடத்தின் முன்புற ஸ்லாப் திடீரென இடிந்து, அதன் கீழ் நின்று கொண்டிருந்த 3 பேர் மீதும் விழுந்தது. இதில் மணிகண்டன், கவுதம், முரளிராஜன் ஆகியோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினார்.

இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனே 3பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. உடனே இது குறித்து குமரலிங்கம் போலீஸ் மற்றும் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 3பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளை அகற்றி அடியில் சிக்கியிருந்த 3பேரையும் மீட்டனர். ஆனால் 3பேரும் மூச்சுத் திணறி அந்த இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3பேரின் உடல்களையும் மீட்டு,  பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலைக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்து நின்ற 3 தொழிலாளர்கள் மேற்கூரை இடிந்து உயிரிழந்த சம்பவம் உடுமலை பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் 3பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து குமரலிங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமுதாய நலக்கூடம் ஏற்கனவே சிதலமடைந்திருந்த நிலையில் அதனை இடித்து புதிய கட்டிடம் கட்டப்பட இருந்தது. இந்தநிலையில் மேற்கூரை இடிந்து 3பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அந்த கட்டிடம் முற்றிலும் இடித்து அகற்றப்பட உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News