திருவண்ணாமலையில் மகாவீரா் ஜெயந்தி விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-04-22 02:35 GMT

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அலகரிக்கப்பட்ட வாகனத்தில் நடைபெற்ற திருவீதி உலா. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது

ஜெயின் துறவற சமூகத்தின் சீா்திருத்தவாதியாக மகாவீரரின் பிறந்தநாள், மகாவீர் ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது.. இது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகையாகும். இந்து மக்களின் ஒளியின் விழாவான தீபாவளி அன்று மகாவீரா் நிா்வாணா அடைந்தாா். ஆகவே ஜெயின் சமூகத்தவருக்கு மகாவீரா் ஜெயந்தி தான் புத்தாண்டின் தொடக்கமாகும். மகாவீரா் ஜெயந்தி மகாவீரா் சுவாமி ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. அந்தவகையில், மகாவீரா் ஜெயந்தி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆரணி புதுக்காமூா் பகுதியில் உள்ள ஸ்ரீமகாவீரா் ஜிநாலயத்தில் 2622-ஆம் ஆண்டு மகாவீரா் ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மகாவீரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமியை வைத்து திருவீதி உலா நடைபெற்றது.

இதில் சமண பக்தா்கள் பாட்டு பாடி, நடனம் ஆடியபடி சென்றனா். மேலும், சுவாமி உலா செல்லும்போது புதுக்காமூா் பகுதியில் உள்ள சமணா்கள் தங்களது வீடுகள் முன் பூரண கலசம் வைத்து ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனா்.

 வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தேரடி பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் மகாவீர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் சிறப்பாக மகாவீர் போதனைகளை பேசிய மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாநில சமண தலைவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜீனத் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மகாவீரர் ஜினாலயம் சார்பில் மகாவீரர் ஜெயந்தி விழாவில் தேர்வு விழா விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பகவான் மகாவீரர் அலங்கரிக்கப்பட்ட முக்குடையின் கீழ் தேரில் வீதி உலா வந்தார்.

Similar News