திருவண்ணாமலையில் தக்காளி விலை கடும் சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் இன்று தக்காளியின் விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-11-26 02:56 GMT

திருவண்ணாமலையில் தக்காளி விலை திடீர் சரிவு ஏற்பட்டு முதல் தரம் ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனையாகிறது.  இரண்டாம் தரம்  ஒரு கிலோ ரூ.60க்கும் விற்பனையானது

இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர்மழையால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு கிலோ ரூ.20  விலையில் இருந்து மடமடவென உயர்ந்து  நேற்றுவரை ஒரு கிலோதக்காளி ரூ.120 ஆக விற்பனையானது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இன்று காலை தக்காளியின் விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News