வாட்ஸ் அப்பில் பரவும் மின் இணைப்பு துண்டிப்பு தகவல் தவறானது: மின் வாரியம் விளக்கம்

மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் மின்வாரியம் கூறியுள்ளது

Update: 2023-03-01 02:23 GMT

கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற தவறான தகவலை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மின் கட்டணம் கட்டாத காரணத்தால் இன்றிரவு மின் இணைப்பு துண்டிப்பு என்ற தகவல் தமிழகம் முழுவதும் எஸ்எம்எஸ், வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அதில்,  உங்களின் கடந்த மாத மின் கட்டண தொகை அப்டேட் ஆகாத காரணத்தால், உங்களின் மின் இணைப்பு இன்று இரவு துண்டிக்கப்படும். இதற்கு உங்களின் மின்சார வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளவும். அல்லது உங்களின் பில் தொடர்பான விவரங்கள் வாட்ஸ் அப்பில் இந்த எண்ணுக்கு அனுப்ப வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தவறான தகவல். எஸ்எம்எஸ், வாட்ஸ் அப்பில் வரும் தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என்று என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் மேற்கண்ட வாட்ஸ் அப் செய்திகள் அனுப்பப்படுவதில்லை. இது போன்ற பொய்யான செய்திகள் தற்போது பரவலாக தவறான நோக்கத்தோடு பொதுமக்களிடம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் வாடிக்கையாளர்கள் மின் கட்டணத்தை கட்ட விரும்பினால் மின் அலுவலகத்தில் அல்லது இணையதளத்தில் மட்டுமே கட்டலாம் எனவும் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின் துறை சார்பில் ஏதேனினும் ஊழியர் தொலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ்ஆபில் மூலமாகவோ அணுகினால் அதை நம்ப வேண்டாம் எனவும் மின் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் குறுஞ்செய்தியில் வந்தது போல் இரவு நேரங்களில் மின் துண்டிப்பு செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட பொய்யான செய்திகளை நம்பி பண இழப்புகள் ஏற்படுவதை தவிர்த்து விடுமாறும், அந்த இணைப்புக்குள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News