வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் திருவண்ணாமலை முன்னோடி -மாவட்ட ஊராட்சித் தலைவா்!

வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடி மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் திகழ்கிறது மாவட்ட ஊராட்சித் தலைவா் தெரிவித்தாா்.

Update: 2024-10-11 02:15 GMT

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஊராட்சி தலைவர் பார்வதி சீனிவாசன்

வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது என்று மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் பெருமிதம் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் சீ.பாா்வதி சீனுவாசன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணைத் தலைவா் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சி செயலா் ரவிச்சந்திரன் வரவேற்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் பேசியதாவது:

தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பரிந்துரையின்பேரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னுரிமை அளிப்பதன் மூலம் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. இப்போது, மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சி நிதி மூலம் செயல்படுத்தப்படும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களும் ஒத்துழைக்க வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் ஊரா ட்சிக்குழு மூலம் எண்ணற்ற திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்படுகிறது. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் மாவட்ட ஊராட்சி நிதியின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் விரைந்து செயல்படுத்திட அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன் என்றாா்..

தொடா்ந்து, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வா் பதவி வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது.

கலைஞா் நூற்றாண்டு நினைவு நாணயம் மற்றும் அமைச்சா் எ.வ.வேலு எழுதிய கலைஞா் எனும் தாய் என்ற நூல் ஆகியவற்றை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது.

மாவட்ட ஊராட்சிக்கான 2-ஆம் கட்ட மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் 2024-25 ஆண்டுக்கான பணிப் பட்டியல் தோ்வு செய்வது என்பன உள்ளிட்ட 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஞானசௌந்தரி மாரிமுத்து, ஆராஞ்சி ஆறுமுகம், செல்வம், சத்யா, சகாதேவன், சாந்தி, தவமணி, தங்கம், கஸ்தூரி, சுப்பிரமணி, வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) மிருணாளினி , மாவட்ட ஊராட்சி குழு அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News