திருவண்ணாமலை: கண் மருத்துவர் வராததால் மாற்றுத்திறனாளிகள் தர்ணா

அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமுக்கு கண் மருத்துவர் வராததால் மாற்றுத் திறனாளிக்ள தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-20 07:22 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

திருவண்ணாமலையில் நடந்த அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமுக்கு கண் மருத்துவர் வராததால் மாற்றுத் திறனாளிக்ள தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வாரந்தோறும்  மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான மாற்றுத் திறனாளிகள் அவர்களது காப்பாளர்களுடன் வந்து கலந்து கொண்டனர். இதில் ஏராளமான மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பம் அளித்தனர். 

விண்ணப்பதாரர்களை காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் இன்று நடைபெற்ற முகாமிற்கு கண் மருத்துவர் வராததால் மாற்றுத் திறனாளிகள் ஆட்சியர் அலுவலக போர்ட்டிகோ முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News