முழு ஊரடங்கால் வெறிச்சோடிய திருவண்ணாமலை

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய திருவண்ணாமலை தேவையின்றி வெளியில் வருபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்

Update: 2022-01-09 10:41 GMT

முழு ஊரடங்கால் மூடப்பட்டு போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த  திருவண்ணாமலை கோயில் கிரிவலப் பாதை

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி திருவண்ணாமலையில் நேற்று இரவு 10 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நேற்றே வாங்கிச்சென்றனர். இதனால் மளிகை கடை, காய்கறி கடை உள்ளிட்டவைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. நேற்று மீன் கடைகள் இரவு 10 மணிவரை செயல்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார், செய்யாறு நகர பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். கிரிவலப்பாதை முழுவதும் தடுப்புகள் அமைத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News