மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்: விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், மானிய விலையில் வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் பெறலாம் என்று, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அழைப்புவிடுத்துள்ளார்.

Update: 2022-01-23 01:45 GMT

மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளன. இந்த இயந்திரங்களை பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.

பிறகு,  அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளத்தில் தங்களுக்கு தேவைப்படும் இயந்திரங்கள் கருவிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிறுவனங்களை,  தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். நிகழாண்டு முதல் தவணையாக ரூபாய் 60 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் 69 இயந்திரங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நிதியாண்டில் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள் கருவிகளை மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்க முடியும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசப்பாக்கம், போளூர், வட்டங்களை சேர்ந்த விவசாயிகள் நெ. 813, பி, வானவில் நகர் வேங்கிக்கால் , திருவண்ணாமலை என்ற முகவரியில் இயங்கும் வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம்.

ஆரணி , செய்யாறு,  வெம்பாக்கம்,  வந்தவாசி , சேத்துப்பட்டு  வட்டங்களை சேர்ந்த விவசாயிகள்,  நெ 3, மில்லர் சாலை , வேளாண் வணிக விற்பனை மைய வளாகம், ஆரணி என்ற முகவரியில் இயங்கும் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம், என்று மாவட்ட ஆட்சியர் முகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News