அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெருவிழா

Arunachaleswarar Temple - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் இரவு ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெருவிழா நடைபெற்றது.

Update: 2022-08-06 01:28 GMT

சிறப்பு அலங்காரத்தில்  ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

Arunachaleswarar Temple - சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், குருபூசை சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் சின்ன கடை தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் தெருவில் எழுந்தருளினார்.

பின்னர் நேற்று இரவு சிறப்பு அலங்காரத்தில் மேல தாளங்கள் முழங்க ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாடவீதி வலம் வந்து அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் எழுந்தருளினார். ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் விழாவினை முன்னிட்டு நேற்று இரவு சிறப்பு நாதஸ்வர கச்சேரி மற்றும் வான வேடிக்கை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News