திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக ஜமாபந்தி நிகழ்வுகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக ஜமாபந்தி நிகழ்வுகள் நடைபெற்றன.

Update: 2024-06-22 01:31 GMT

மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வட்டங்களிலும் வருவாய் தீா்வாய கணக்குகளை சரி பார்க்கும் நிகழ்வான ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், கலந்து கொண்டு ஜமாபந்தி நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

அது தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் ஜமாபந்தி நிகழ்வுகள் மூன்றாவது நாளான நேற்று நடைபெற்றது.

முதல் நாள் முகாமில் 177 மனுக்களும், இரண்டாவது நாளாக 202 மனுக்கள் பெறப்பட்டு துறை வாரியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று வெம்பாக்கம் உள்வட்டத்திற்குட்பட்ட கீழ்நெல்லி, திருவடிராயபுரம், சோழவரம், பெரும்புலிமேடு, அரியரப்பாக்கம், கனகம்பாக்கம், செல்லபெரும்புலிமேடு, நமண்டி, அழிஞ்சல்பட்டு, நரசமங்கலம், செட்டித்தாங்கல், ஒழுக்கவாக்கம், வெங்களத்தூர், வடமாவந்தல், சித்தாத்தூர், திருப்பனமூர், திருப்பனங்காடு, பில்லாந்தாங்கல், கரந்தை, காகனம் ஆகிய 20 கிராம பொது மக்களிடமிருந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.

இதில் பட்டா மாறுதல் – 156, மனுக்களும் உட்பிரிவு பட்டா மறுதல்- 78, அளந்து அத்து காட்டுதல் – 18, ஆக்கரமிப்புகளை அகற்றுதல் 17, புதிய குடும்ப அட்டை கோரி-4, இலவச வீட்டுமனைபட்டா – 36, முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை – 17 இதர துறைகள்-51, இதர மனுக்கள் 33 ஆக மொத்தம் 410 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பெற்று துறை ரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் வேளாண் துறை இணை இயக்குநா் ஹரகுமாா், அலுவலக மேலாளா் (பொது) ரவி, உதவி இயக்குநா் நில அளவை பதிவேடுகள் துறை திருநாவுக்கரசு, வெம்பாக்கம் வட்டாட்சியா் துளசிராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News