திருவண்ணாமலையில் இரண்டாவது நாளாக குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

திருவண்ணாமலையில் இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

Update: 2024-06-23 01:04 GMT

தேரடி தெருவில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும் சொல்வார்கள்.

வறுமையின் பிடியில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் மிக உயர்ந்து நிலைக்கு செல்ல முடியும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.

அதன்படி நேற்று முன்தினம் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7:46 மணிக்கு துவங்கி நேற்று 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7.21 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பௌர்ணமி இரண்டாவது நாளான நேற்று பௌர்ணமி தினம் முடிந்தும் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதன் பிறகு நேற்று காலை 10 மணிக்கு மணிக்கு பிறகு பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்க தொடங்கியது.

நேற்று சனிக்கிழமை இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வருகை நேற்று வெகுவாக அதிகரித்தது. அதிலும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வருகையும் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் தொடர்ந்து வருவதால் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனத்திற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் சுவாமி தரிசனத்திற்கு கிட்டத்தட்ட 5 மணி முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் சூழ்நிலை உருவானது.

நேற்று பகல் 2 மணிக்கு மேல் பக்தர்களின் கூட்டம் மிக அதிகரிக்க தொடங்கியது. 

பொது தரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் கூட்டம் அதிகரித்திருந்த நிலையில் தரிசன வரிசை கோயிலுக்கு வெளியே சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு மேல் அதாவது ராஜகோபுரம் முதல் தேரடி தெரு பூத நாராயண பெருமாள் கோவில் என வரிசை நீண்டிருந்தது, சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் நேற்றும் இன்றும் பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

Tags:    

Similar News