திருவண்ணாமலையில் சுகாதார ஊக்குனர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஊக்குனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-06-21 11:38 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊக்குனர்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஊக்குனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு ஓட்சா ஊராட்சி பணியாளர்கள் மாநில சங்கம் சார்பில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சிகளில் பணிபுரியும் சுகாதார ஊக்குனர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், ஓஎச்டி ஆப்பரேட்டர்கள் மற்றும் பள்ளி தூய்மை பணியாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓட்சா கூட்டமைப்பின் மாநில பொருளாளர் கிரிஷா தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர்கள் முருகன், தேவி, பொருளாளர் அரசு, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னம்மாள், சபிதா, தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் 877 நபர் பணியாற்றும் சுகாதார ஊக்குனர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்க சுகாதார ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதற்கு மாத தொகுப்பு புதியதாக ரூ.2ஆயிரம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. கடந்த 5 மாதமாக இவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனவே இவர்களுக்கு காலதாமதம் இன்றி உடனடியாக ஊதியம் வழங்கிடுக என்பன உள்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இ தி ல் த மி ழ க ம் முழுவதும் இருந்து 500 க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பணி புரியும் சுகாதார ஊக்குனர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், ஓஎச்டி ஆபரேட்டர்கள் மற்றும் பள்ளி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெய்சக்தி நன்றி கூறினார்.

Similar News