திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

ஆனி மாத பௌர்ணமியொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

Update: 2024-06-22 00:54 GMT

கிரிவலம் வந்து பக்தர்கள்

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.

அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

அனைத்து நலன்களையும் தரக் கூடியது பெளர்ணமி கிரிவலம். எதை நினைத்து செல்கிறோமோ அதை நிறைவேற்றி, அத்தனை நலன்களையும் தரக் கூடியது.

வாழ்நாளில் ஒருமுறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வேண்டியது அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி தருவார். வறுமையின் பிடியில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் மிக உயர்ந்து நிலைக்கு செல்ல முடியும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.

அதன்படி நேற்று 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7:46 மணிக்கு துவங்கி  இன்று 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7.21 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதன் பிறகு மாலை 4 மணிக்கு பிறகு பக்தர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்காக அதிகரிக்க தொடங்கியது.

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு தரிசனம் அமர்வு தரிசனம் விஐபி தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஆகியவை நேற்றும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொது தரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் கூட்டம் அதிகரித்திருந்த நிலையில் தரிசன வரிசை கோயில் வெளிப்புற ஆதாரத்தில் தேரடி தெரு வரை நீண்டிருந்தது சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

பௌர்ணமி கிரிவலம் பக்தர்கள் நலன் கருதி தமிழகம் கர்நாடகம் ஆரந்திரம் புதுவை தெலுங்கானா மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநில அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பிலும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இன்றும்,  30 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று 30 சிறப்பு பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படஉள்ளன. கோவை, நெல்லை, மதுரை, ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலை நகரை சுற்றி ஒன்பது இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Tags:    

Similar News