ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயிலில் அரிசி வருகை

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான 1,300 மெட்ரிக் டன் அரிசி ரயில் மூலம் வந்தது

Update: 2022-05-09 01:44 GMT

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரயிலில் வந்த அரிசி மூட்டைகள். 

தமிழகத்துக்கு தேவையான ரேஷன் அரிசி,  தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்துக்கான ரேஷன் அரிசி ஒதுக்கீடு பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில்,  ஆந்திர மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 1,300 டன் புழுங்கல் ரேஷன் அரிசி மூட்டைகள் திருவண்ணாமலைக்கு ரெயில் மூலம் வந்தன. அரிசி மூட்டைகள் லாரி மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் அனுப்பி வைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கிருந்து நியாயவிலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்,   என  நுகர்பொருள் வாணிபக்கழக  துணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News