போளூரில் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள்

போளூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக போடப்பட்ட இரும்பு கேட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினார்கள்.

Update: 2022-08-26 10:54 GMT

போளூரில் வட்டாட்சியர் சண்முகம் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் இரும்பு கேட்டை அகற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கோரால்பாக்கம் கிராமத்தை சார்ந்த பழனி என்பவர் கரைப்பூண்டி கிராமத்தில் ஏரி கால்வாய் புறம்போக்கில் பொதுமக்களுக்கு இடையூறாக இரும்பு கேட் அமைத்திருந்தார்.

இதனால் பொதுமக்கள் ஏரிக்கால்வாயை கடந்து தங்களது நிலம் மற்றும் ஆடு மாடுகளை ஓட்டி செல்ல முடியாமல் இருந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமியிடம் புகார் மனு அளித்தனர். இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க போளூர் வட்டாட்சியர் சண்முகத்துக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் வட்டாட்சியர் சண்முகம் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் இரும்பு கேட்டை அகற்றினர்.

அப்போது மண்டல துணை தாசில்தார்கள், தட்சிணாமூர்த்தி, வட்ட துணை ஆய்வாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர் அபிமன்னன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News