மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்: 627 மனுக்கள், பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்

Public Grievance -குறைதீர்வு கூட்டத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை மனுக்களை பெற மொழிபெயர்ப்பாளர் நியமனம்.

Update: 2022-06-28 01:46 GMT

மாற்றுத்திறனாளி கூறும் செய்தியை மொழிபெயர்ப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு விளக்குகிறார்.

Public Grievance -திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். அதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 627 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார். நிலுவையில் உள்ள மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

குறைதீர்வு நாள் கூட்டத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பெற வசதியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சிறப்பு மொழி வேட்பாளரை நியமனம் செய்து , அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்யும் விதமாக மொழிபெயர்ப்பாளர் நியமித்ததை மாற்றுத்திறனாளிகள் பாராட்டி வரவேற்றனர்.  மாவட்ட ஆட்சியருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித் தாசில்தார் வெங்கடேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முக சுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குமரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் வெற்றிவேல், கவிதா, வினோத்குமார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News