திருவண்ணாமலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி அண்ணாதுரை எம்.பி.நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை பணிகளை அண்ணாதுரை எம்.பி.நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-26 07:44 GMT

திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை பணிகளை அண்ணாதுரை எம்.பி.நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை பணிகளை அண்ணாதுரை எம்.பி.நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை கடந்த வாரம் டெல்லியில் இந்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் டி.ஆர்.டி.ஓ. செயலாளரை சந்தித்து திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட பகுதி மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்ய 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் (medical oxygen production plant) அமைத்து தர கோரிக்கை வைத்தைத் தொடர்ந்து அந்த பணிகளை விரைந்து தொடங்கிட அனுமதி வழங்கப்பட்டது.

இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று.வரும் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை பணிகளை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன், NHAI PD மற்றும் மருத்துவ துறையினர் ஆகியோர்களுடன் பார்வையிட்டு, விரைந்து முடித்திட எம்.பி. அண்ணாதுரை ஆலோசனை வழங்கினார்.

Tags:    

Similar News