திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள் விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆறாம் நாள் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது

Update: 2022-10-02 00:39 GMT

பராசக்தி அம்மன் ஆண்டாள் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாசலஸே்வரர் ஆலயமாகும். இங்கு சிவனே மலையாக எழுந்து நின்று அருள் பாலித்து வருகிறார். அதனால் இந்த கோவில் அண்ணாமலையில் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் பக்தர்களால்  நம்பப்படுகிறது. இந்த  ஆலயத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது

ஆறாம் நாள் நிகழ்ச்சியாக மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று  எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு ஆண்டாள் அலங்காரம் செய்யப்பட்டது. வாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சோடச உபசாரம் என்று அழைக்கப்படுகின்ற 16 வகை தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டு ஓதுவார் மூர்த்திகள் அம்பாள் பாடல்கள் பாடியும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

Tags:    

Similar News