அருணை மருத்துவக்கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம்

அருணை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதால், நடப்பு ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது

Update: 2021-11-03 01:51 GMT

அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் கம்பன்

திருவண்ணாமலை ஜீவா கல்வி அறக்கட்டளை மூலம் செயல்படும் வரும் அருணை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தேசிய மருத்துவ ஆணையம்,  நேஷனல் மெடிகல் கமிஷன்,  அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.  எனவே நடப்பு கல்வியாண்டில் அருணை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 150 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதுகுறித்து அருணை  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் கம்பன்  தெரிவிக்கையில், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ சேவை வழங்க வேண்டுமென்பது அமைச்சர் எ வ. வேலு வின் விருப்பம்.

அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்கப்பட்டு கடந்த ஒரு ஆண்டாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு உயர் நிலை வசதிகள் நேரடி ஆய்வு நடத்தப்பட்டு, மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.மேலும் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு 150 மாணவர்கள் சேர்க்கை நடைபெற அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் மற்றும் சிறுநீரக சுத்திகரிப்பு மையம் உள்ளன. அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தும் வசதியும் உள்ளது. திருவண்ணாமலை போன்ற கல்வியில் பின்தங்கிய மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தரமான மருத்துவக் கல்வியை பெறவேண்டும் என்பது அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோக்கமாகும் . என தெரிவித்தார்.

கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் கண்காணிப்பாளர்கள் மருத்துவர் குப்புராஜ்,   முனைவர் ஆர். சேஷாத்ரி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News