திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கைத்தறி தினவிழா

தேசிய கைத்தறி தினவிழாவில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Update: 2022-08-10 00:57 GMT

கைத்தறி மற்றும் விற்பனை முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட  திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறிதுறை சார்பில் 8-வது தேசிய கைத்தறி தினவிழாவினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் நடைபெற்றது.

சிறப்பு கைத்தறி கண்காட்சியை கலெக்டர் முருகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில் 20 நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் கடன் தொகையாகவும், 15 நெசவாளர்களுக்கு கைத்தறி குழுமத்தின் மூலம் தறி கூடங்களுக்காக ரூ.6 லட்சத்து 75 ஆயிரமும், 15 நெசவாளர்களுக்கு கைத்தறி குழுமத்தின் மூலம் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான தறி உபகரணங்களும் என மொத்தம் ரூ.23 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை சரக உதவி இயக்குனர் இளங்கோவன், துறை அலுவலர்கள், கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த பணியாளர்கள் மற்றும் நெசவாளர் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News