திருவண்ணாமலை நெடுஞ்சாலை துறை வட்டம் இன்று துவக்கம்

நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட அலுவலகத்தை திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்

Update: 2021-09-21 08:08 GMT

நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட அலுவலகத்தை திருவண்ணாமலையில் அமைச்சர் எ வ.வேலு துவக்கி வைத்தார்.

நெடுஞ்சாலைத்துறை திருவண்ணாமலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட அலுவலக துவக்க விழா இன்று காலை திருவண்ணாமலை திண்டிவனம் சாலை நெடுஞ்சாலை துறை வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு அரசு முதன்மை செயலாளர் நெடுஞ்சாலைத்துறை நீரஜ் குமார் தலைமையில், தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு வட்ட அலுவலகத்தை துவக்கிவைத்தார்

தமிழக நெடுஞ்சாலைத் துறையின் நிர்வாக வசதிக்காக சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி, திருப்பூர் ,கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டார அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் திருவண்ணாமலை, செய்யாறு, வேலூர் ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் செயல்படும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகங்களுக்கான புதிய வட்டார அலுவலகம் திருவண்ணாமலையில் இன்று முதல் செயல்படும் என நெடுஞ்சாலை துறை அமைச்சர் தெரிவித்தார்.

இதன்மூலம் நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பிற்கான தமிழகத்தில் 9வது வட்டம் இன்று முதல் திருவண்ணாமலையில் உதயமாகியது. நெடுஞ்சாலை துறை புதிய வட்ட அலுவலகம் திருவண்ணாமலையில் உருவாவதன் மூலம் மாவட்டத்தின் வளர்ச்சி பாதைக்கு மற்றொரு மைல்கல்லாக இது அமையும் என அமைச்சர் தனது உரையில் தெரிவித்தார்.

இவ்விழாவில் திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், திருவண்ணாமலை எம்பிஅண்ணாதுரை, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கோட்டப் பொறியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி நன்றியுரை நிகழ்த்தினார்.

Tags:    

Similar News