விவசாயிகளை எல்லா உரங்களையும் வாங்க சொல்லி வற்புறுத்தினால் உரிமம் ரத்து

விவசாயிகளை எல்லா உரங்களையும் வாங்க சொல்லி வற்புறுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்

Update: 2022-01-22 06:30 GMT

மாதிரி படம் 

திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களுக்கு வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைப்படி தேவையான உரம் பயன் படுத்த வேண்டும். மேலும் டிஏபி உரங்களுக்கு பதிலாக மணிச்சத்து எளிதில் கிடைக்கக்கூடிய சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தலாம்.

உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை மட்டுமே வழங்கிட வேண்டும். யூரியா உரத்துடன் விவசாயிகள் விரும்பாத உரஙகளை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட விற்பனை மையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.

உர விற்பனை மையங்களிலும் உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை பராமரிக் கவேண்டும். உரமூட்டையில் குறிப் பிட்டுள்ள விலைக்கு மட்டுமே விற்பனை செய்யவேண்டும்.

இவற்றை முறையாக பின்பற்றாத விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு பருவதிற்கான உரங்கள் யூரியா 4,668 மெட்ரிக் டன், டிஏபி 588 மெட்ரிக் டன், பொட்டாஸ் 679 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 266 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 1,185 மெட்ரிக் டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவைகளை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என கூறியுள்ளார் 

Tags:    

Similar News