திருவண்ணாமலை மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

Update: 2024-06-03 11:54 GMT

முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 101வது பிறந்த நாள் விழாவில், சிறப்பு அன்னதானம் வழங்கிய எ.வ.வே. கம்பன்

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான  கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள்  விழா கடந்த ஜூன் 3ம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை ஓராண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின், நூற்றாண்டு விழா நிறைவு பெற்று, 101 வது பிறந்த நாள் விழா திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் நகர திமுக சார்பில் திருவண்ணாமலை வேலூர் சாலையில் உள்ள கருணாநிதி சிலை அருகில் கொண்டாடப்பட்டது,

முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா பேரணி மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பேரணியாக சென்று முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் 500 நபர்களுக்கு அறுசுவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே. கம்பன் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மலர் தூவி பின் பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினார்.

செங்கம் நகர திமுக

செங்கம் தொகுதி, செங்கம் நகர திமுக சார்பில் செங்கம் பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்கள் சுமார் 1000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கினார்.

தொடர்ந்து தண்டராம்பட்டு மத்திய ஒன்றிய திமுக சார்பில் தண்டராம்பட்டில் பொது மக்களுக்கு சிறப்பு அன்னதானம் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ கிரி வழங்கினார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றிய கழகச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், தேர்தல் பணி குழு உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர், செங்கம் நகர கழக செயலாளர் அன்பழகன், பேரு ஊராட்சி தலைவர் சாதிக் பாஷா, பொதுக்குழு உறுப்பினர்கள் ,கூட்டுறவு சங்கத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கலசப்பாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் முன்னாள் முதல் கருணாநிதி 101 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அன்னாரது திருவுருவப்படத்திற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா நகர செயலாளர் சௌந்தர்ராஜன் புதுப்பாளையம் சேர்மன் சுந்தரபாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் பஞ்சாயத்து தலைவர் ஜெயந்தி லட்சுமணன், மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன், கருணாநிதி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானங்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் ,ஒன்றிய கழக செயலாளர், வடக்கு மாவட்ட துணை செயலாளர் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News