திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாமில் முறையான ஏற்பாடுகள் செய்யபடாததால் மாற்றுத் திறனாளிகள் மிகவும் அவதியடைந்தனர்

Update: 2022-04-13 00:56 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் 

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த சிறப்பு மருத்துவ முகாம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கியது. இதில் அடையாள அட்டை பெற மாவட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் அவர்களின் பராமரிப்பாளர்களுடன் வருகை தந்தனர். முறையான ஏற்பாடுகள் செய்யபடாததால் முகாமிற்கு வந்த மாற்றுத் திறனாளிகள் மிகவும் அவதி அடைந்தனர். ஏராளமானோர் வருகை தந்தால் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு விண்ணப்பங்களை அளித்தனர்.

இந்த முகாமில் பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை புதியதாக பெறுவதற்கும், புதுப்பித்துக் கொள்ளவும் நேரடியாக விண்ணப்பித்தனர். அப்போது சிறப்பு மருத்துவர்கள் மூலம் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் அமர்வதற்கு போதிய இட வசதி இல்லததாலும் அவர்கள் மிகவும் அவதி அடைந்தனர். எனவே வரும் காலங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் மாற்றுத் திறனாளிகள் வரிசையாக சென்று விண்ணப்பிக்க முறையான ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தற்காலிக பந்தல்கள் அமைக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர், மேலும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்

Tags:    

Similar News