நகை கடன் தள்ளுபடி செய்யக்கோரி மஞ்சள் தாலிக் கயிறுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நகைக் கடன் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-21 07:23 GMT

நகைக்கடன் தள்ளுபடி செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் இரும்பு கேட்டில் தாலிக்கயிறை கட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று கையில் மஞ்சள் தாலி கயிறுடன் நின்று கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் நுழைவு வாயில் இரும்புக்கேட்டில் தாலி கயிறை கட்டினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விவசாயிகள் லாபகரமான விலை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். 2016-ல் விவசாயிகளின் நகைக்கடனில் ரூ.1 லட்சம் தள்ளுபடி செய்து மீதமுள்ள அசல் வட்டியை செலுத்தி நகையை மீட்டு கொண்டோம்.

எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி 2016-ம் ஆண்டை போன்று நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், என்றார்.

பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News