திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியை தக்க வைத்துக் கொண்ட திமுக

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி 15-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 07:36 GMT
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம்.

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 31 பேர் களத்தில் உள்ளனர்.

திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று காலை சரியாக 8 மணிக்கு அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, தற்போது ஆறு சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது 15 -வது சுற்று முடிவில்

திமுக வேட்பாளர் அண்ணாதுரை 4,24,537 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் கலியப்பெருமாள் 2,37,719 , வாக்குகள் பெற்றும்,

பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 1,01,036 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆரணி நாடாளுமன்ற தொகுதி

ஆரணி மக்களவைத் தொகுதியில் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளது. இதில் செஞ்சி, மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஆரணி தொகுதியில் எம்.எஸ்.தரணிவேந்தன்(திமுக). ஜி.வி.கஜேந்திரன்(அதிமுக), ஏ.கணேஷ்குமார்(பாமக), ஆகியோர் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று காலை சரியாக 8 மணிக்கு அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, தற்போது 9 ம் சுற்று முடிவில்

திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 2,11603 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 1,25742,

பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 102720,  வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News