திருவண்ணாமலையில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை தொடக்கம்

Diwali Special -காந்தி பிறந்த நாளை ஒட்டி தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-10-03 01:34 GMT

தீபாவளி சிறப்பு விற்பனை விழாவில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி,விற்பனையை துவக்கி வைத்தார்.

Diwali Special - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற காந்தியடிகளின் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை விழாவில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி காந்தியடிகளின் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.

கதர் வாரியத்தின் கண்காணிப்பாளர் நரேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கதர் விற்பனை 136 லட்சம் குறியீடு முழுமையாக எட்டப்பட்டது.

நடப்பாண்டில் இம் மாவட்டத்திற்கு ரூபாய் 150 லட்சம் விற்பனை குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டும் சிறப்பு விற்பனைக்கு 30 சதவீதம் கதர் பாலியஸ்டர் மற்றும் பட்டு ஆகிய ரகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அரசு ஊழியர்களும் பொதுமக்களும் ஆதரவளித்து கதர் ஆடைகளை வாங்கி தீபாவளியை மகிழ்வுடன் கொண்டாடிட கேட்டுக் கொள்ளப்படுகிறது என கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன் , வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல்,  மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம் , ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News